​(மனமே, மாதவன் சரண் புகுவாய்…)

(இந்த பாடலை, “கங்கா ஹாரதி” மெட்டில் பாடிப் பார்க்கலாம்.!)
கண்ணனை நினை மனமே..மதுரை−

மன்னனை நினை மனமே;

கருணா சாகரன் அவனை−

கருத்தினில் பதி மனமே!
எண்ணத்தில் வைத்தவனை−நீயும்

எதிர் கொண்டு நிறுத்தவனை!

அன்பை, அவனுக்கென்றாக்கு−

அனைத்தும் உன் வசமே!
நாமங்கள் நவின்றிடுவாய்;

நிதமும் அவன் புகழ் பாடிடுவாய்;

நாளும் பொழுதும் அவனை,

நயந்து நீ நெருங்கிடுவாய்!
உன் குரல் செவி மடுப்பான்;

உடனே, அவனாய், வந்திடுவான்;

உள்ளம் கனிந்திடும் அன்பால், 

உனையே தாங்கிடுவான்!
தாயாய், நீ அறிவாய்; அவனை

தந்தையும் என்றறிவாய்;

சேயாய் அவனை நீ நாட−

சேர்த்துன்னை அணைத்திடுவான்!
கவலைகள் ஒழித்திடுவாய்; அவனின்

கழல்களைப் பிடித்திடுவாய்;

கடமையாய் வருவான் கண்ணன்;

கலி எல்லாம் தீர்த்திடுவான்!
வாமனன் அவன் தானே! அவன் நம்−

வைகுந்தப் பெருமானே!

சேம நல் வீடும் பெறவே−

சேர்வோம் அவன் சரணே!
மாதவன் நமக்கிருக்க−

மனமே, பயமும் இனி எதற்கு?

ஆதவன் அவனியில் அவனே−

அடைவாய் அவன் சரணே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s