​(வேணுமே, ஈதெல்லாம்….)

உன் மார்வம் சாய்ந்து நானும்−

உறக்கம் கொள்ள வேணும்;

உன்மூச்சுக்காற்றில், எந்தன்−

கேசம் ஆட வேணும்!
உந்தன் கரத்தினுள்ளே−

என் கரமும் அடங்க வேணும்;

ஓடும் காலம் எல்லாம், அங்கே−

ஒடுங்கி நிற்க வேணும்!
காணும் கனவில் கூட, எனை நீ−

காதல் செய்ய வேணும்;

நாணம் கொண்ட நானும்−

உன் தோளும் தழுவ வேணும்!
என்னைப் போல நீயும், எனக்காய்−

ஏங்கி இருக்க வேணும்;

எண்ணம் எல்லாம் நீயும், எனை−

நிறைத்துக் கொள்ள வேணும்!
வார்த்தை இழந்த பெண்ணை, நீ−

வாரி அணைக்க வேணும்!

பார்க்கும் பார்வை அதிலே, நான்−

பசியுமாற வேணும்!
என்னைக் கொண்ட பின்னே−உன்னை

நிறைவு சூழ வேணும்;

எனக்கும், உனக்கும் இடையே−

இந்த நெருக்கம் போதும், போதும்!
நம்மை மீறி யாரும்−இனி

நடுவில் வந்திடாது−

நந்தன் மகனே நீயும்−

நிதம் பார்த்துக் கொள்ள வேணும்!
விண்ணை மேவும் நிலவாய்−நான்

உன்னை நாடி வரவும், 

என்னைத் தாங்க நீயும்−

என்றும், எனக்கே எனக்காய்,  வேணும்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s