​(நாவே, அவனைப் பாடு…)

கோவிந்தா, ஹரி கோவிந்தா, என்றே

கூப்பிடு நீ தினமே;

யாவிலும் நிறைந்த யாதவனை−

ஆவியே உருகிட, அழை நிதமே!
“வாசு தேவா” எனச் சொல்ல, இனி

வரு நாளெல்லாம், சுபதினமே!

“கேசவா” என நீ  உருகிடவே,

காத்திடும் அவன் கரம் அனுதினமே!
“அரி” என ஈரெழுத்துரைத்தாலே, 

எரிக்கும் வல் வினை, இனி ஏது?

“கரி வரதா” என கனிந்துருக,

கலியும்,தொடரும் நிலை ஏது?
“மாதவ” நாமம் நவின்றாலே,

மனதில், அவனும் நிறைவானே;

“நாதனே, ந்ருஸிம்ஹா” எனப் பாட, 

நினைக்கும் நேரமே வருவானே!
“சிரிதரன்” என்றே சிந்தையிலே,

ஒன்றியே, நீயும் சொல்வாயே!

“பிரியேன், உனை நான்” என்பானே,

ப்ரியமாய் தன்மடி வைப்பானே!
“வாமனன்” உருவை நினைத்தாலே, 

வந்திடும், வசந்தம் தன்னாலே;

“வைகுந்த” நாமமோ உனக்காக, 

வரமாய் மாறிடும், ஒரு நாளே!
“அச்சுதா” என்று நீ அழகாக.

ஆசையாய் ஒரு தரம் அழைத்தாலே,

அல்லலும், அகன்று ஓடிடுமே;

அவனது அருளும் கூடிடுமே!
“ராம” நாமம் நா தரித்தால், 

காம நோயும் அழிந்திடுமே;

மா மாயன் அவனின் கருணையுமே,

மருந்தாய், மயர்வை ஒழித்திடுமே!
நாமங்கள் நயந்தே சொல்லிடுவாய்;

நாதனும் ஆவான் உன் வசமே;

நலிவும், கலியும் இனி ஏதுனக்கே?

நலந்தரும் நாடு, உன் கைவசமே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s