​(வருவாயா, உன்னைத் தருவாயா?…)

கண்களை மூடியே இருந்தாலும், 

காட்சியாய், நீ ஏன் வருகின்றாய்?

பெண் நான் ஒதுங்கவே நினைத்தாலும்,

பேதமை நீ ஏன் செய்கின்றாய்?
நினைவிலும், கனவிலும் தொடர்ந்து வந்து, என்−

நெஞ்சின் சுமை ஏன் கூட்டுகிறாய்?

இணையும் நாளும் வருமென்று−உன்

ஏலாப் பொய்யால் ஏன் வாட்டுகிறாய்?
குழலிசை என் செவி வீழ்ந்தாலே−

கலங்கிடும் மனம் நான் கொண்டேனே;

விழலில் விழுந்த நீரது போல், எனை−

வீணாய் உன்னிடம் தந்தேனே! 
வாடைக்காற்றெனை எரிக்கிறதே;

வீசும் தென்றலும்,  மிக தகிக்கிறதே;

வருவாய், வருவாய் என்றெதிர்பார்த்தே, இந்த−

ஏழையின் உள்ளமோ துவள்கிறதே!
பெண்ணின் வருத்தமே அறியாயோ?

பாவமே ஈதென தெளியாயோ?

இன்றிலையெனில், நாளை வருவாயோ?

என் நிலைக்கே,  நீயும் இரங்காயோ?
அதரமாம் அமிழ்தை, மருந்தாக்கு;

அபலை எனக்கதை, நீ விருந்தாக்கு;

ஆதுரம் பெருக, உனை எனக்காக்கு; என்−

ஆராக் காதலை, என்றும் உனக்காக்கு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s