​(கண்ணா, கொஞ்ச(ம்) வாடா….)

அப்பமொடு அதிரசமும் செய்து தரேன் அச்சுதா;

அழகு விழிகள் அகல விரித்து, அருகமர்வாய் அரவிந்தா!

செப்புவாயும் திறந்திடுவாய், சிறிது, சிறிதாய் இட்டிடுவேன்;

சுவை உனக்கு சரி தானா, சொல்லிடு நீ, அறிந்திடுவேன்!
கட்டி வெண்ணை கொடுப்பதற்கு கோடி பேர்கள் தவமிருக்கா;

சட்டித் தயிரும் கொண்டு தர, சனக்கூட்டம் காத்திருக்கு;

விட்டு என்னை நீங்காமல், நீ இருந்தால் போதுமடா,

சுட்டு உனக்கு தந்திடுவேன், விதம் விதமாய் பட்சணமே! 
சுட்டித் தனம் நீ செய்தால்− சந்தோஷம் நான் படுவேன்;

கட்டிப் போட மாட்டேன் நான்; கலங்காதே 

கண் மணியே!

பட்டு மேனி, பார்வை விட்டு அகலாது, இரு நீயே;

எட்டி விலகி போனால் நான் எள்ளளவும் தாங்கேனே!
எட்டிக் காயே எனக்கும் அந்த வேதமெனும் பாடமெல்லாம்;

என் அருகே நீ இருக்க, எதற்கு அதன் தேவையெல்லாம்?

கட்டிக் கரும்பே, கரும்பொன்னே, கண் எதிரே நின்றிடா;

கணம் கூட மறையாமல், கூடவே, நீ இருந்திடடா!
எட்டெழுத்து மந்திரத்தில் எம்பிரான் நீ உறைபொருளாம்;

எட்டவொணா மறை பொருளாம்;

என் போன்றோர்க்கரும் பொருளாம்;

வட்ட நேமி வலங்கையனாம், வாழ வைக்கும் திருவடியாம்;

கிட்ட வந்து காட்டிக் கொடு, கட்டமெல்லாம் போக்கிக்கிறேன்!
கிட்டாமல் போய் விடுமோ, உன் கருணை எனக்கென்று,

கலங்கி தினம் தவிப்பதெல்லாம், கண்ணா, உன் மனமறியும்;

தட்டாமல் என் ஆசை, தயை புரிய வருவாயோ?

தவிக்கும் எந்தன் நெஞ்சுக்கும், அருமருந்தும் இடுவாயோ??

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s