​(கண்ணா, தெரியலையே…)

கட்டிக் கரும்புன்னை

கை நழுவ விடுவேனா?

கட்டிப் போட்டெந்தன்

கண் முன் வைப்பேனே!
மறந்தே சற்றயர்ந்தால்−நீ 

மாயம் செய்வாயே;

மயக்கும் பேரழகே! உனை

மடியில் ஒளிப்பேனே!
வெண்ணை வேணுமென்றால்−நீ

என்னைக் கேட்டிடா;

ஒன்று, இரண்டென்று−நான்

உருட்டியே கொடுப்பேனே!
பாலும் வேணுமாடா,

பசுந்தயிர் வேணுமாடா?

நாலு வித பட்சணமே−

நீ ருசிக்க வேணுமாடா?
உண்ண நினைப்பதெல்லாம்,

உடன் நீ ரகசியமாய், 

என் பட்டுக் கருப்பழகே, 

என் காதில் சொல்லிடடா!
பட்சணம் பத்து விதம்,

பரிவுடன் செய்து வந்து−

பல கதை சொல்லியுமே,

பாங்காய் ஊட்டிடுவேன்;
பாலும், பசுந்தயிரும்,

போதுமென நினைக்கும் வரை,

பகல் முதல் இரவு வரை,

பக்கமிருந்தளித்திடுவேன்!
தின்னக் கொடுப்பதற்கு

என்னால் முடியுமடா; ஆயின்,

என்னைக் கொடுப்பதற்கு, 

எனக்கு, இதுவரை தெரியலைடா!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s