​(தயை புரிய வா, தாமோதரா…)

நமதமர்கள் கைச்சிறை யான் வீழும் காலை,

நாரணா, உன் நாமம் நவில மாட்டேன்;

சம நாடி நிலையில் யானுள்ள போதே, 

சாரங்கா, உனநாமம் சொல்லிடுவேனே!
முப்போதும் சொல்ல வேணும் உந்தன் நாமம்;

முனையாமலிருப்பதெலாம், எந்தன் பாபம்;

எப்போதோ, ஒரு முறையே சொல்வன் யானும்;

தப்பேதும் பாராது, தயை புரி நீயும்!
வாய் கோணி, நினைவு யான் இழக்கும்

வேளை−

வந்தெதிர் நின்று, வாதையெலாம் போக்கிடுவாயே;

ஆய் என்று ஒரு பந்தம் உனக்கும் உண்டே;

ஆதரிப்பாய் அடியேனை, அதுமனம்

கொண்டே! 
தீந்தமிழால் உனை பாடித் துதித்தேனில்லை;

தூமலரால், உனை யானும் தொழுதேனில்லை;

சாந்த குணம் எதுவும் யான் கொண்டேனில்லை;

சரணடையும் மார்க்கமோ, கண்டேனில்லை!
ஏதங்கள் புரிய யான் மறந்தேனில்லை;

எம்பெருமான் உன் சேவை செய்தேனில்லை;

பாதகமே வாணாளாய் கழித்திருந்தேனே;

பரந்தாமா, அது புரிய,  திகைத்து நின்றேனே!
காரணங்கள் தேடாதே, என்னிடமில்லை; உன்

கருணைக்குப்  பாத்திரமும் அடியேன் இல்லை;

நாரணா, ஆனாலும், நீ நயந்திடலாமே;

நின் ஆணை எனை மீட்டு தந்திடலாமே!
ஆர் கேட்பார் உன்னையே,  என்−

சக்கரக்கையா?

அருளிட நீ விழைந்தாலே, அது போதும் ஐயா!

கார்முகிலே, கருங்களிறே, என் கண்ணபிரானே!

கனிந்தென்னை கழல் சேர்ப்பாய், உன் சேயும் யானே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s