்்​(கண்ணா வா, மணிவண்ணா வா…)

(ஒளி படைத்த கண்ணினாய் மெட்டு..)
நந்தகோபன் மைந்தனே, வா,வா,வா;

நங்கை சோதை பாலனே, வா,வா,வா;

தந்தை தளை, அறுத்தவா, வா,வா,வா;

தனயன் கடன் செய்தவா, வா, வா,வா!
ஆயர்பாடி ரத்தினமே வா, வா, வா;

ஆநிரையைக் காத்தவனே வா, வா, வா!

மாயங்கள் புரிந்தவனே வா, வா, வா!

மங்கையர் உளம் கொண்டவனே வா, வா, வா!
வெண்ணை உண்ட ஆயனே, வா, வா  வா;

மண்ணை உண்ட மாயனே, வா, வா,வா;

பொன்னை ஒக்கும் பதமதை, காளியன் மேல்−

அன்னு வைத்த அச்சுதா, வா, வா, வா!
பொன்றச் சகடம் உதைத்தவா, வா, வா, வா;

குன்று குடையா எடுத்தவா, வா, வா, வா;

கொன்று கஞ்சன் முடித்தவா, வா, வா, வா;

என்றும் இடையர்க்கன்பனே, வா, வா, வா!
பஞ்சவர் தூதனே, வா, வா, வா;

பாஞ்சாலி ரக்ஷகனே, வா, வா, வா;

பார்த்தனுக்கு சாரதியாய், தேர் ஏறி, 

பாரதப் போர் முடித்தவனே,, வா, வா, வா!
வாதையிலே வாடும், எம் துயர் துடைக்க,

கீதை சொன்ன கண்ணனே, வா, வா, வா;

தாதையாகி எமையும், தாங்கிடவே,

ராதா மணாளனே, வா, வா, வா!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s