​(க்ருஷ்ண சரணாஷ்டகம்…)

(ப்ரம்ம முராரி சுரார்ச்சித லிங்கம் மெட்டு…)
ப்ரம்மனும் சிவனும் போற்றிடும் பாதம்,

நிர்மல நாதன் நாரணன் பாதம்;

ஜன்மமும் மரணமும் தீர்த்திடும் பாதம்;

ஜனார்த்தன க்ருஷ்ணனின் பங்கய பாதம்! 
தேவரும் அசுரரும் அண்டிடும் பாதம்;

பாவமாம் பிறவியை, போக்கிடும் பாதம்;

யாவையும் தேடித் தந்திடும் பாதம்;

தேவகி மைந்தனின் தூய பொற்பாதம்!
உறுவினை அழித்திடும் உன்னத பாதம்;

மருந்தெனவாகும் மன்மத பாதம்;

அருளின் எல்லையாம் அச்சுதன் பாதம்;

கருமங்கள் தொலைத்திடும் கண்ணனின் பாதம்! 
அருந்தவத்தோர்கள் அடைந்திடும் பாதம்;

பெருந்தவத்தாலே பெற்றிடும் பாதம்;

கருவறைத் துயரைக் கழித்திடும் பாதம்;

இருவினை ஓட்டிடும் ஈசனின் பாதம்!
தேவியர் பற்றிடும் தண் மலர் பாதம்;

ஆவிக்கோர் அடைக்கலம் அரவிந்தன் பாதம்;

மா வினை மாய்க்கும் மாலவன் பாதம்;

ஆவினம் காத்த அமுதனின் பாதம்!

 

பாசப் பிணியினை “ப”ந்திக்கும் பாதம்;

வாச மலர்களால் வந்திக்கும் பாதம்;

மாசுகள் மனத்தே நிந்திக்கும் பாதம்;

நேச நிமலனின் நலம் தரும் பாதம்!

 

கோடி சூரிய ஒளி கொண்ட பாதம்;

வாடிடும் உயிர்களை வாழ்விக்கும் பாதம்;

நாடிடும் நல்லுயிர் நயந்திடும் பாதம்;

பாடிப் பரவுவோம் பரமனின் பாதம்! 
காமங்கள் அழித்திடும் காஞ்சன பாதம்;

சேமங்கள் சேர்த்திடும் சாரங்கன் பாதம்;

ஆமது உனக்கே அடியனுமென்றால்,

வாமனன் பாதம் வைகுந்தம் தருமே!
இட்டமாய் இதனை நவின்றிடும் ஆன்மம்−

கட்டங்கள் ஒழிந்தே, கழலிணை சேரும்;

விட்டிடும் வாழ்வின் துயரங்கள் தாமே−

எட்டெழுத்துட்பொருள் சேர்த்திடும் நலமே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s