​( அகம் குழைக்குதே உன் முகம்…)

பரந்தாமன் பருகு முகம்,

பார்த்ததுமே உருகு முகம்;

வரமாகி வாய்த்ததுவோ,

வைகுந்தனுக்கு இந்த முகம்?
அச்சுதனின் அழகெல்லாம் 

அணுஅணுவாய் ரசிக்கும் முகம்;

இச்சுவையை தவிர்த்தெதுவும்,

இல்லை எனக்கு என்னும் முகம்!
விழியதுவின் கருமணியாய்,

வைகுந்தனை கொண்ட முகம்;

வழியெல்லாம், அவன் தடங்கள்−

விரும்பி நிதம் தேடும் முகம்!
வேங்குழலின் இன்னிசைக்கு,

வாழ்வெல்லாம் ஏங்கு முகம்;

ஆங்கவனை தாங்கிடவும்,

அவனருளைத் தேடும் முகம்!
உத்தமனும் தனை இழந்து

உன்மத்தம் ஆகு முகம்;

பத்திரமாய் பாற்கடலில்  

பொத்தி வைத்து மீட்ட முகம்!
சொக்க வைக்கும் கோதை முகம்

சொத்தாக வந்த முகம்;

சொர்கத்தின் அறிமுகமாய்

சோதை மகன் காணு முகம்!
“என்னவளே” என விழைந்து

எம்பிரான் குழையு முகம்;

“இனி அவளே” என்றவனும்

தனை அவளில் தொலைத்த முகம்!
பரந்தாமன் பருகு முகம்;

பார்த்ததுமே உருகு முகம்;

வரமாகி வாய்த்ததுவோ, 

வைகுந்தனுக்கு இந்த முகம்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s