​(கண்ணன் வந்தான், அங்கே கண்ணன் வந்தான்…)

கோதையை கூட்டிச் செல்ல−

கோவிந்தன் வந்தாச்சு;

வாதை ஏதும் இனி இல்லை,

வைகுந்தன் பாத்தாச்சு!
கையோடு கை சேர்த்து

காதலை அவன் சொல்வான்;

மையோடும் விழிகளிலே

மயக்கமெல்லாம் தருவான்!
வதனம் மெல்ல சிவந்திடவே

வார்த்தை கொஞ்சம் சொல்வான்;

அதரத்தோடு அதரம் வைத்து,

அன்பையுமே விதைப்பான்!
கண்ணாலே சாடை செய்தே

கன்னியையே அழைப்பான்;

தன்னாலே நீ வரவும்−

தன் மடியில் சாய்ப்பான்!
விரலோடு விரல் கோர்த்து

விரகம் எல்லாம் தணிப்பான்;

மறுக்காது அன்பு தந்து, உன்

மனம் போல நடப்பான்!
உனக்காக நானிருக்கேன் என−

உளமாறச் சொல்வான்;

உயிரோடு உனைச் சேர்த்து,

உந்தன் இடமும் தருவான்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s