​(கோதையை ஆட்கொள்ள வா, கோவிந்தா…)

வேங்கடவன் வருவானோ, என்−

வேதனையை தீர்ப்பானோ?

ஈங்கொருத்தி அவன் நினைவில்−

உருகுவதை உணர்வானோ?
என் பாவை நோன்பதனை

என் ப்ரபுவும் ஏற்பானோ?

தன் மார்பில் எனை மலராய்

தாங்கி அவன் மகிழ்வானோ?
நான் சூடிக் கொடுத்ததெல்லாம்

நாரணனும் உவப்பானோ?

தான் அதையே வேண்டியுமே

தன் சிரத்தில் அணிவானோ?
காதலினால் பேசும் மொழி−

கனிந்தவனும் கேட்பானோ?

பேதையிவள் பிதற்றலென்று

பாராமுகமாய் இருப்பானோ?
மனமறிந்து, மங்கை எனை

மாலையிட அழைப்பானோ?

மேள தாளத்தொடு, தன்

மாளிகைக்கே, அழைப்பானோ?
வாசலில் வந்ததுமே,

வஞ்சி எனை ஏற்பானோ?

வைகுந்தம் கூட்டிச்சென்று−

வாழ்ச்சியும் தான் ஈவானோ?
தூதாக கிளி அனுப்ப,

தன் சேதியையும் சொல்வானோ?

பாகாக உருகும் இந்த−

பாவையையும் கொள்வானோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s