​( இவன் கருணையை பணி மனமே….)

விண்ணின்று இறங்கியதே,

வெண் அரவின் அம்சம்;

மண் உழன்ற மாந்தர் தம்−

கண் போன்ற கவசம்!
ஏதங்கள் எமதெல்லாம், 

காதங்கள் கடந்தோட, திருப்

பாதங்கள் தந்தெமை−

பாலிக்க, வந்ததே!
அலை மோதும் சம்சாரம்−

அதிலிருந்து மீள, 

அழகான திருநாமம்

அவனிக்கு ஈந்ததே!
பரந்தாமன் மீட்காத, இந்த−

புவனத்தின் உயிர்களை,

பெருக்கோடும் கருணையால்

பரிந்தெடுத்தாண்டதே!
வையம் பெற்ற வரமிதுவாய்,

வைணவம் பெற்ற பேறிதுவாய்,

வாழ்விக்கும் தெய்வமுமாய்,

வறியவர்க்காய் வந்ததே!
சீரழியும் மாந்தர் குலம்−

சீர்மை அடைந்திடவே,

காரேய் கருணையாய்,

கண் முன்னே வந்ததே!
சீவனெல்லாம் ஒன்றென்றும், அவை−

சிரீதரனின் கன்றென்றும்

செவ்வடியே நன்றென்றும்,

சீர்திருத்தம் செய்ததே!
ஆரோ நிகராவர்? அந்த− 

அன்பிற்கும் ஈடாவார்?

வாராது வந்த மாமணியின்

மாறாத மலரடி பணி மனமே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s