​(36)   நாச்சியார் மறுமொழி..

கண்டேன் உன் கால் தடங்கள், என் 

கால் பதியும் பாதையிலே;

உண்டேன் உன் அடித் துகளை, என்

விரகத்துக்கோர் அருமருந்தாய்;

என்றோ தரிசனமே,

என்னவனே, ஏழைக்குமே?

அன்றே அகம் குளிர்ந்து, இந்த−

ஆவியுமே அடங்கிடுமே!
தீண்டும் கரங்களுக்காய், 

தேகம் இது காத்திருக்கே;

மீண்டும் காண்பதெப்போ,

மனதிதுவும் தவமிருக்கே;

வேண்டும் வஞ்சி என்னின்

வாதையை நீ தீர்ப்பதெப்போ?

ஆண்டுகள் திங்களுமாய்,

அபலையை நீ ஆள்வதெப்போ?
காலை, மாலையென்றும்

காலமெல்லாம் கரைந்திடுந்தே;

நாளும் பொழுதுமெல்லாம்

நிற்காமல் விரைந்திடுதே;

ஆலைச் செங்கரும்பாய்,

ஆவியுமே அல்லலுறுதே;

வேலையதன் மேலே

விழி மூடி ஏனிருக்காய்?
தூதாய் உனக்கனுப்ப

துணை யாரும் எனக்கிலையே;

தனியே தவிக்கின்றேன்;

யாரறிவார் என் நிலையை?

தோதாய் வார்த்தை சொல்லி,

தேற்றிடவோர் மொழி இலையே;

தாபம் எரிக்கும் எனை

தாங்கிட உன் கரம் இலையே!
வருவதாய் வார்த்தை சொல்லி,

வைகுந்தா, எனை காப்பாய்;

வருகின்ற போது வரை

வாடி நிற்கும், எனை மீட்ப்பாய்!

உருகும் உள்ளமிது உன்

உருவம் கண்டாலே,

பெறுமே பேரின்பம்−

பரமனதை அருள்வாயே!
இளமையை விருந்தாக்க−

என் கண்ணா, தவமிருக்கேன்;

இரு கரம் கொண்டதனை,

இனி உனதாய், நீ ஏற்பாய்!

கடமை காத்திருக்கே,

கண்ணா, நீ விரையாமல்,

காலமும் தாழ்த்தாதே..

கன்னி மனம் தாங்காதே!
வெண்ணையை உரியில் வைத்து−

உருகாமல் காப்பது போல்,

என்னை உன்னிலிட்டு,

எனதுயிரை காத்திடுவாய்!

கண்ணை நீங்கி ஒரு கருமணியும் இயங்கிடுமோ?

உன்னை துறந்திருந்தால், ஊனில்−

உயிர் நிலைத்திடுமோ?
பெம்மான் அனுபவிக்க

படையலாய் எனைத் தந்தேனே;

சும்மா இருந்து விட்டால்

சுகமேது இருவருக்கே?

அம்மான் அபலையை நீ

அமுது செய்து, அருளிடுவாய்;

எம்மா வீடெதுவும் இதை விடவே 

எனக்கேது?…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s