​(தாயே, தயை புரிவாயே…)

பாரிலுள்ளோர் துயர் துடைக்க,

பாற்கடலில் உதித்தவளே!

பரந்தாமன் பக்கமிருந்து,

பரிந்தெமக்கு அருள்பவளே!
முழு நிலவின் சோதரியாய்,

முகுந்தனின் பத்தினியாய்,

அழும் கண்ணீர் ஆறெல்லாம்,

பெருகாது நீ துடைப்பாய்;
தாமரைக்கண் கொண்டு, 

பாமரரை பார்த்திடுவாய்;

வையத்து நாயகியாய், அருட்−

கையால், எமை காத்திடுவாய்;
வைகுந்தன் பெருமாட்டியாய்,

வறுமை எல்லாம் விரட்டிடுவாய்;

பைநாகத்தான் பத்தினியாய்,

பெருகும் இன்பம் சேர்த்திடுவாய்!
செல்வச் சீமாட்டியாம்; நீ−

செல்லுமிடமெல்லாம் செழிப்பாம்; உன்

நல்வரவை நயந்திடும் எம்

இல்லமும் வந்தமர்வாய்!
சர்வ மங்கள நாயகியாய்−

செல்வ வளம் தந்திடுவாய்!

சாரங்கன் பத்தினியாய், எமக்கு−

சேம நலங்களும் சேர்த்திடுவாய்!
விஷ்ணு பத்தினியாய்,

விசால நேத்ரம் கொண்டு, யாம்−

விளங்கிடவே  நீ பார்த்தால், 

துலங்கிடுமே சௌபாக்கியமே!
இனி என்ன வேண்டுமென,

எம் தாயே அறிந்திருந்தும்−

ஈதென்ன மவுனமோ,

இது உனக்கும் தான் தகுமோ?
எப்பொழுதோ கொடுவென்று−

எத்தனை நாள், பொறுத்திருப்போம்?

இப்பொழுதே தருவளென்று, நீ

இரங்க, ஏன் மறுப்போம்?
தாயாக தயை புரிவாய்,

தாங்கும், இரு கரம் தருவாய்;

சேயோங்கள் வந்து விட்டோம்;

சேர்த்தெம்மை நீ அணைப்பாய்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s