​(பாக்யாத லக்ஷ்மி “பா”ரம்மா…)

கனக மணி ரத்தினமே! மால்−

மனம் கவர்ந்த சித்திரமே!

சனகாதியரும் தாயெனவே,

தினம் வணங்கும் நித்திலமே!
அகலகில்லேன் இறையென்னு−

அவன் மார்பில் அமர்ந்தவளே!

விலகாது என் இல்லம்−

விரும்பியே நீ உறைந்திடுவாய்!
இரு விழிகள் எமை பார்க்க−

இடம் எமக்கு இல்லையென்னு−

பெருந்துயரும் எமை நீங்கி,

பதறித் தான் ஓடாதோ?
பார்கடலின் திருமகளே,

பத்மநாபன் பத்தினியே,

பாலிப்பாய் எம்மையுமே,

பேர் விளங்கி நிறம் பெறுமே!
தாயாகி எமையெல்லாம்,

தாங்கிடுவாய் பெருந்தயவே!

சேயெல்லாம் சுகமடைய

சேர்த்தணைப்பாய் குணநிதியே!
சொந்தமே நீயென்று−

வந்து நின்றோம், உன் வாசல்;

எந்தாயே, மனமிரங்காய்,

உன் அருளைப் பொழிந்திடுவாய்!
ஆர் உள்ளார் எமக்கிங்கு,

அபயக்கரம் நீட்டிடவே?

அச்சமெல்லாம் நீக்கி எமை,

அச்சுதன் தாள் சேர்த்திடுவாய்!
சொல்லித் தான் தெரிந்திடுமோ,

தேவைகள் எமதெல்லாம்?

அள்ளித்தான் தாராயோ,

அகிலத்துக்கோர் அன்னை அன்றோ?
தாயே! தயாபரியே,

தாமோதரன் பெருந்தவமே!

வாயேன், எம்மிடையே−

யாமும் வாழ்ந்து போயிடவே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s