​(41)  நாச்சியார் மறுமொழி…

கனவினில் அவன் வந்து−என்

கரம் இரண்டை பற்றிட்டான்;

காதல் மொழிகளெல்லாம்−என்

காதில் மெல்லச் சொல்லிட்டான்!
இது நிஜமாகும் என்றே

என் உள்ளம் சொல்கிறதே;

இந்த காதலும் கனியுமென்று−

என் மனமும் மகிழ்கிறதே!
கண்ணீரெல்லாம் துடைத்திட்டான்;

கன்னத்தில் லீலை செய்திட்டான்;

கண்ணன் விரும்பும் காரிகையாய்−இந்த

கன்னியை அவனும் ஏற்றிட்டான்!
இது நிஜமாகும் என்றே

என் உள்ளம் சொல்கிறதே;

இந்த காதலும் கனியுமென்று−

என் மனமும் மகிழ்கிறதே!
ஆரத் தழுவி என்னை, 

அவனும் அணைத்திட்டான்;

அகமும் குளிர்ந்திடவே

ஆதுரமாய் பார்த்திட்டான்!
இது நிஜமாகும் என்றே

என் உள்ளம் சொல்கிறதே;

இந்த காதலும் கனியுமென்று−

என் மனமும் மகிழ்கிறதே!
அதரம் அன்பை எழுதிடவே−

அபலையை வசமும் ஆக்கிட்டான்;

வதனம் நாணிச் சிவந்திடவே−

வார்த்தைகள் சொல்லி மயக்கிட்டான்!
இது நிஜமாகும் என்றே

என் உள்ளம் சொல்கிறதே;

இந்த காதல் கனியுமென்று

என் மனமும் மகிழ்கிறதே!
தீராத தாபம் தீர்த்திட்டான்;

தெவிட்டாத இன்பம் அளித்திட்டான்;

துணை இனி வாழ்வில் நீயென்று−

தீர்க்கமாய் அவனும் கூறிட்டான்!
இது நிஜமாகும் என்றே

என் உள்ளம் சொல்கிறதே;

இந்த காதலும் கனியுமென்று

என் மனமும் மகிழ்கிறதே!
தனிமைத் துயரம் இனி உனக்கே−

துளியும் கிடையாதென்றிட்டான்;

இனிமை, இனிமை, அது ஒன்றே−

இனி உன் வாழ்வில் என்றிட்டான்!
இது நிஜமாகும் என்றே

என் உள்ளம் சொல்கிறதே;

இந்த காதலும் கனியுமென்று

என் மனமும் மகிழ்கிறதே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s