​(42)  நாச்சியார் மறுமொழி….

கண் இரண்டும் எனக்கெதற்கு?−

சொல்லடா கண்ணா, 

கரியவன் உன் பேரழகை 

பாராத போது;
பெண் எனது கரத்துக்கு

இங்கென்ன வேலை?−

மன்னன் உன்னை

தழுவிடவும் நேராத போது;
அழகு மலர் சூடுவதும்,

அவசியம் தானோ?−

அண்ணல் எனை

அருகிருந்து காணாத போது;
மணி முத்து அலங்காரம்

எல்லாம் ஏனோ?−

மணிவண்ணன், 

மங்கை எனை நாடாத போது;
புதுக் கூரை, பொன் வளையும் 

யாருக்கு வேணும்?−

யாதவனின் வாசம்

எனை சூழாத போது; 
குளிர் சாந்தும், கண்மையும் 

தேவை தானோ?−

கண்ணன் கண்கள் 

அவையெல்லாம் காணாத போது;
கால் சதங்கை, கனக கொலுசும்,

சுமைகள் தானோ?−

கள்வன் என்னைத் 

தேடியுமே வாராத போது;
கன்னி எனது இளமை வனப்பு

வீணே தானோ?−

மன்னவனே, உனக்கென

அது ஆகாத போது!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s