​(கனிவாய், க்ருபா ஸமுத்ரா…)

அனந்த ஸயனா, ஆத்ம ஸ்வரூபா,

சனகாதியர் தொழும் ஸ்வயம் ப்ரகாஸா!

வனமாலா தர வைகுந்த வாஸா!

உனைச் சரணடைந்தேன்; உய்விக்க வா, வா!
கருணா ஸாகரா, கமலா நாயகா,

காருண்ய ஸிந்தோ, கதி என்றும் நீயே;

கோவர்தன தர கோகுல பாலா,

கோவிந்த, மாதவ, காத்தருள்வாயே!
விண்ணவர் வேந்தே, வேங்கடேஸா,

என் துயர் போக்க, துரிதமாய் வருவாய்;

கண்ணின் இமை நீ; காக்கும் கரம் நீ;

கண்ணா, என் கலி கரைக்கும் அருள் நீ!
நாவினால் பாடுவேன், நாரண நாமம்;

போவென எனது பாவங்கள் போக்கு;

தாயினும் பரிந்தெனை, தாங்கிட வா நீ;

தமியேன் உந்தன் தயைக்கு, ஒரு பொருளே!
அருள் உனததுவோ, ஆழியில் பெரிது;

அடியேன் துயரோ, அதை விடப் பெரிது;

இருவினை நீக்கி, என்னுயிர் காக்க−

இறை நீ இரங்கினால், எனக்கெல்லாம் சிறிதே!
வா, வா, மாதவா, வந்தருள் புரிவாய்,

வரமாய், வாழ்வை மாற்றி நீ அருள்வாய்!

கா, கா, கண்ணா, கனிந்தெனை காப்பாய்,

கதறிடும் பிறவியை, கழலிணை ஏற்பாய்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s