​(உனக்கும், எனக்குமான உறவு…)

உன்னைத் தொடரும் பசுவாக நான் ஆக வேண்டும்;

உன் கைப் புல்லை, உணவாக நான் கொள்ள வேண்டும்;

உன் கரம் தீண்டிய நீர் கொண்டு, தாகம் தணிய வேண்டும்;

உன் கால் சுவடுகளில்,  என் கால் தடம் கலக்க வேண்டும்!
நீ அமரும் நிழலிலே, உன் துணையாக வேண்டும்;

நீ வருடும் சுகமெல்லாம், என் மேனி உணர வேண்டும்;

நின் முகம் பார்த்து மயங்கும் அந்த, “ஆ” ஆக வேண்டும்;

நின் கழல் சுவையை உணர்ந்து, என் கலி தீர்க்க வேண்டும்!
வாய் வைத்து, நீ அருந்த,  நான் பாலும் தர வேண்டும்; உன்

வாய் கொண்டு ருசிக்கும் வெண்ணை, எனதாக வேண்டும்;

உற்ற உறவாய், எனை என்றும், நீ கொள்ள வேண்டும்;

ஊரார், அசூயையொடு, எனை நோக்க வேண்டும்!
என் குளம்பின் புழுதியில், நீ குளிக்க வேண்டும்;

என் கண்களால் அதை,  நான் ரசிக்க வேண்டும்;

எத்தனையோ நாமங்கள் உனதான போதும், 

எனை ஏத்தும், “கோபால” நாமமே, உனை மயக்க வேண்டும்!
“கோவிந்தா” எனும் போதில், என் முகம் நினைக்க வேண்டும்;

கூடி நாம் அனுபவித்தவை, நினைவு கூர வேண்டும்;

கோகுலமும், ஆய்பாடியும், உன் திவமாக வேண்டும்;

கொடுத்தும், எடுத்தும், நம் சொந்தம், 

என்றும் நிலைக்க வேண்டும்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s