​(கண்ணா, வா, வா, வா..)

வட்ட கரு விழிகள் இரண்டும், 

வானத்து சந்திர சூரியரே;

இட்டமுடன் பார்க்குதே அவையும், என்

இல்லத்து பலகாரமதை;

கிட்ட வாடா, கண்ணா, காத்திருக்க வேணாமடா,

கொட்டிக் கொடுப்பதற்கே செய்தேன், 

காரமும், இனிப்புமெல்லாம்!
எட்டப் போகாதேடா, கண்ணா,

என் மனம் தாங்காதடா;

சட்டி வெண்ணை சேர்த்து வைத்தேன்,

சடுதியிலே, நீ அமுதும் செய்திடடா!

தட்டில் இருப்பதெல்லாம், என்

தங்கமே, உனக்கே இருக்குதடா;

குட்டிப் பேரெழிலே, நீயுமவை−

கொண்டாலே போதுமடா!
பட்டுக் கை அதனால், நீயும்,

பல வகை பட்சணங்கள்−

விட்டுப் போகாமல், ஒவ்வொன்றாய்,

வாயில் இட்டு ருசிப்பாயடா;

மட்டாக ஏதுமில்லை கண்ணா,

மனம், குறை நீ கொள்ளாதேடா;

லட்டு, வடை , பூந்தி என்று,

லட்சணமாய் செய்துள்ளேனடா!
குட்டிக் கால் வைத்து, என் வீட்டில்,

குறுக்கும் நெடுக்கும் நீ ஓடிடா;

எட்டிப் பிடித்துன்னை, ஆசை தீர,

கட்டி முத்தம், நான் தருவேனடா!

காட்டிக் கொடடா, கண்ணா, 

உந்தன்−

காலிணை அழகை எல்லாம்;

பாட்டில் வைக்க முயலுமே−

பதுமமும், பலரும் மகிழ்ந்திடவே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s