​(வரமாய் வருவாய்…..)

அச்சுதா, அனந்தா, 

அகில ஸம்ரக்ஷகா,

ஆனந்த ரூபா,

ஆத்ம ஸ்வரூபா!
இகபர நாதா,

இரங்குவாய் எமக்கே;

ஈசனுன் இணை நிழல்,

ஈவாய் தமர்க்கே!
உரக மெல்லணையா,

உத்தம புருஷா, 

ஊற்றமும் உடைய நீ−

ஏற்றமே தருவாய்!
எம்பெருமானே,

எமக்கருள் நேசா!

ஏழை பங்காளனே,

ஐயனே, வந்தோம்!
“ஓம்” எனும் ப்ரணவம்−

உணர்த்திடும் பொருளே!

ஒப்பிலா அப்பனே!

உன்னடி சரணம்!
நிரந்தரம் நீயென,

நின்னையே வரித்தோம்;

வரமாய் வருவாய்,

வாழ்வினைத் தருவாய்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s