காணி நிலமும், கறவை மாடும், 

காணாமல் போய் ரொம்ப நாளாச்சு;

கேணி நீரும், காரை வீடும்

கண்ணுக்கு அகப்படாமல் ஆயாச்சு;

கோணியில் அள்ளிய நெல்லும், பருப்பும்−

கதைகளில் வந்த வழக்காச்சு;

நாணிய பெண்மையும், நடையின் நளினமும்,

நேற்றைய கனவே என்றாச்சு!
காளை வண்டியின் சத்தம் எல்லாம்,

காதங்கள் தாண்டி போயாச்சு;

பாளை விடுகின்ற தென்னை எல்லாம்,

பார்க்க, புத்தகம் வந்தாச்சு;

சாலையில் விற்கும், சட்டியும் பானையும்,

சீந்த ஆளில்லை என்றாச்சு;

மாலைத் தென்றலும், மலையும், ஆறும்,

மறந்தே நாள் பல ஆயாச்சு!
இலையில் சித்திரம் என்று நாம் பார்க்க, 

இயற்கையும் இறங்கி வந்தாச்சு;

இழந்தவை எவை என்றறியாவண்ணம், 

இறுகி, நம் மனம் போயாச்சு!!

இனியும் பின்னே வரும் சந்ததிக்கு,

இசைந்தே, தீங்கும் இழைச்சாச்சு;

இதை எண்ணும் போதில், ஏனோ எந்தன், 

இரண்டு கண்களும், குளமாச்சு!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s