​(கண்ணா, வா..மணிவண்ணா, வா…)

அட்டமி நன்னாளில், 

இட்டமுடன் இல்லம் வா,

கட்டிப் பொன் அரசே, என்−

குட்டிப் பேரரசே!
பட்டுக் கருங்குயில் நீ;

பார்க்கப் பரவசம் நீ;

சுட்டும் விழிச்சுடரால், எனை−

சீண்டும், சொர்கமும் நீ!
குட்டிப் பாதமதால், நீ

குதித்தே வந்திடுவாய்;

பட்டுத் துகிலுடனே,

பொன் நகையும் அணிந்திடுவாய்!
கட்டிய பூச்சரங்கள்,

கண்மணி உனக்காமே;

விட்டலன் நடந்து வரும்

வழியதும் மலராமே!
தட்டில் பழங்களுடன்

தீஞ்சுவை பணியாரம்;

வட்டில் பால் தயிரும்,

வரிசையாய் அலங்காரம்!
எட்டெழுத்தான உனை,

எந்தன் கனியமுதை,

கட்டி என் சிந்தை வைத்து, மனம்−

கரைந்தே துதித்திடுவேன்!
கூட்டதும் நீயும் வந்து, 

கண் எதிர் அமர்ந்திடடா; தீபம்

காட்டவும், இனம் கண்டு, எல்லாம்

கனிந்தமுது செய்திடடா!
சூட்டிய மாலைகளும், 

சுவைக்க பணியாரங்களும், 

கட்டழகன் உனதென்று, 

கண்டே நீ மகிழ்வாயடா!
ஏட்டில் சொன்னது போல், 

கூப்பிடும் குரல் கேட்டு,

தேட்டமாய் வந்திடுவாய்;, நானும்

நாட்டமாய் காத்து நிற்பேன்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s