​(பதம் பார்க்கட்டுமா, பாவை?…)

கனவில் தெரியும் உருவம் உனதை, 

காற்றினில் நான் அணைக்கின்றேன்;

மனதில் அந்த சுகமும் உணர்ந்து,

மயிர்கூச்சமே அடைகின்றேன்!
கால நேரம் மறந்து நானும்,

கற்சிலையாய் நிற்கின்றேன்;

கரியவன் உனை, என் கரங்களினால்,

கட்டிப் பிடித்து களிக்கின்றேன்!
தென்றலும் இடை புகுந்திடாது,

தணிக்கையெலாம் செய்கின்றேன்;

என் தனமாய் உன்னை வரித்து,

என்னுள், உன்னை ஒளிக்கின்றேன்!
பொங்கும் எந்தன் காதல் கொண்டு−

புனிதம் உன்னை செய்கின்றேன்;

சங்கம் சுவைத்த வாயின் அமுதம்−

சலித்திடாமல் சேர்க்கின்றேன்!
உன் மேனி வாசம், நாசி படர,

உயிர்ப்பின் சக்தி உணர்கின்றேன்;

பெண்மை தன்னை பரிந்தளித்து,

என்னை நானே தேடுகின்றேன்!
ஈருடலாய் பிரிந்ததெல்லாம், 

இல்லை என்றே ஆகட்டுமே;

ஓருடலாய் உறையும் இன்பம்,

வாழ்ந்து நானும் பார்க்கட்டுமே!
இருப்பதெல்லாம் ஓருயிர் தான்;

இது உனக்கென இனி இருக்கட்டுமே;

மறுப்பதென்ன, மறைப்பதென்ன?

மங்கை உன்னில் கரையட்டுமே!
தீராத காதல் நெஞ்சின்−

தாழ்கள் கொஞ்சம் விலகட்டுமே;

பேராத உன்னை மெல்ல,

பதம் பார்த்து, இவள் வெல்லட்டுமே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s