​(50)  நாச்சியார் மறுமொழி…

முன்னை, அவனின் மடியும் சாய்ந்தேன்;

அண்ணல் வண்ணம் பொன்னின் வண்ணம்;

பின்னை,  அவனின் புன்னகை கண்டேன்;

மன்னன் வண்ணம், மணியின் வண்ணம்;
என்னை, தன் கரம் ஏந்திக் கொண்டான்;

அன்பன் வண்ணம், பச்சை வண்ணம்;

தன்னைத் தந்து, என்னை மீட்டான்;

அன்பன் வண்ணம், அஞ்சன வண்ணம்;
முத்தம் தந்து, இதழே நனைத்தான்;

மோகனன் வண்ணம், முத்தின் வண்ணம்;

சித்தம் நுழைந்து, சுகமே தந்தான்;

அவனின் வண்ணம், அந்தியின் வண்ணம்;
நித்தம் நெஞ்சம் மயக்கி நின்றான்;

நீலக் கடலாய், நாயகன் வண்ணம்;

புத்தம் புதிய பூ −நீ− என்றான்;

பரந்தாமன் வண்ணம், பாலின் வண்ணம்; 
கண்ணின் மணியாய், உனைக் கொண்டேன் என்றான்;

கள்வன் வண்ணம், கொண்டல் வண்ணம்;

உன்னின் உள்ளே கரைந்தேன் என்றான்;

உத்தமன் வண்ணம் உயிரின் வண்ணம்!
வண்ணம் பலப்பல− தான்− கொண்டாலும், இந்த−

பெண்ணிண் வண்ணம் −புரியாதென்றான்! 

எண்ணம் முழுதும், அவன் நிறைந்தாலும்,

என்னை, தெரிந்தும்− தெரியாதென்றான்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s