​(என்னைத் திருடிய கண்ணன் குட்டி…)

கன்னுக் குட்டிக்கு அருகினிலே, என்−

கண்ணன் குட்டி இருக்குது பார்;

காலும்,,கையும் மடக்கி, அது,

கவிழ்ந்து படுத்த தோரணை பார்!
புல்லைத் தின்னாது இந்தக் குட்டி;

பாலும் தராது இந்தக் குட்டி;

வல்லவனாக காரியம் செய்யும்−இந்த

வாலறுந்த, என் கன்னுக்குட்டி!
கயிற்றுக்கு அடங்காத கருப்புக் குட்டி;

கண்ணுக்குள் மறையாத மன்மதக் குட்டி;

வயிற்றில் வெண்ணை பதுக்கும், வம்புக்குட்டி; அது−

வாராது வந்த வெல்லக்கட்டி!
குறு குறு பார்வை கொண்ட குறும்புக் குட்டி;

குழைய வைத்து, மனமீர்க்கும் காந்தக் கட்டி;

கரு கரு மேனி கொண்ட அழகுக்குட்டி; அது,

காணாத அதிசயமாம், கோபாலக் குட்டி!
நானாக நிற்கையிலே நெருங்காத குட்டி;

தனை மறந்த போது வரும் தங்கக் குட்டி;

கோனாக நான் ஏற்ற கோவிந்தக்குட்டி,

கோதை மனமறிந்த, என் காதல் குட்டி!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s