​(எப்போ வருவாயோ?…)

அகத்தில் இயைந்த இளமை  உண்டு;

அகத்தில் இசைந்த ஈர்ப்பும் உண்டு;

அகத்தில் ஒளித்த காதல் உண்டு;

அகத்தில் தவிக்கும் தாபம் உண்டு;
அகத்தில் மாறாத வனப்பும் உண்டு;

அகத்தில் மறையாத மோகம் உண்டு;

அகத்தில் பெண்மையின் நாணம் உண்டு;

அகத்தில் அணைத்திட ஆர்வம் உண்டு;
அகத்தில் சாத்திர ஞானம் உண்டு;

அகத்தில் ஆத்திரம் அதிகம் உண்டு;

அகத்தில் உனை சேரும் வேகம் உண்டு;

அகத்தில் அணை மீறும் எண்ணம் உண்டு;
அகத்தில் உன்னோடு போகம் உண்டு;

அகத்தில் உறவாட யோகம் உண்டு;

அகத்தில் உனை ஆளும் வண்மை உண்டு;

அகத்தில் உனக்கான இடமும் உண்டு;
அகமெல்லாம் அறிந்தவன் நீயே என்று,

ஆகம நூல்களும் சொல்வதென்ன?

அகமதில் நுழைவதுன்னால் கூடுமென்றால், என்,

அகமுடையானே, நீ வருவதென்று??

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s