​(52) நாச்சியார் மறுமொழி….

காதல் கொண்ட மனது−

காலமெல்லாம் உனது,

கண்ணா, அறிவாயோ?
கண்ணிரண்டின் மணியும்,

காவல் தாண்டி, திரியும்;

கண்ணா, அது ஏனோ?
மாயம் செய்து, மங்கை−

மயங்கவும் வைத்தாய்,

கண்ணா, முறை தானோ?
தூது வருமென்று−

தோகைக்கினி என்று−

கண்ணா, சொல்வாயோ?
மாலை எண்ணி வாடும்;

மாலை வர, தேடும், 

கண்ணா, வருவாயோ?
மோகம் கொண்ட பெண்மை,

போகம் கொள்ள ஏங்கும்;

கண்ணா, உணர்வாயோ?
ஆவல் தாண்டி, ஆர்வம்,

அணை உடைத்து போகும்;

கண்ணா, அது நன்றோ?
எல்லை மீறும் முன்பே, 

இல்லை என்றிடாமல்,

கண்ணா, தருவாயோ?
நாணம் கொண்ட நங்கை,

வேணும் எனும் வார்த்தை−

கண்ணா, சொல்வாளோ?
உள்ளிருக்கும் கள்வன், நீ−

உண்மை அறியாயோ?

கண்ணா, கனிவாயோ?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s