​(உயிரும், உருகிடுமோ?…)

பூ பந்து கொண்டு செய்த 

பாதம் இரண்டு தொங்குது;

தூக்கி அதனை கண்ணிலொற்ற,

தாய்மை நெஞ்சம் ஏங்குது!
இதழாலே முத்து பதிக்க,

நெகிழ்ந்து அதுவும் சிவக்குமோ?

இதமாக தடவிப் பார்க்க,

இன்பம் என்னை உருக்குமோ?
மறைத்துக் கொள் உன் மலர் பந்தை,

கண்ணும் பட போகுது;

மகராசா, நீ வெளியில் விட்டால், 

எனக்கு, என்னென்னவோ ஆகுது!
இரட்டை அழகு கண்ட இதயம், 

துடிக்க மறந்து நிற்குது;

எட்டப் போக நினைத்தாலும், 

என் கண்கள் பின்னே இழுக்குது!
உடலின் ஒரு பகுதி கண்டே,

உள்ளம் உருகி போகுதே;

உருவம் மொத்தம் நீயும் காட்ட, என்−

உயிரும், உருகிப் போகுமோ?..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s