​(நீயே, நானாய்….)

வெண்ணை போல வழுக்கி விழுந்து,

உன்னில் நானும் கரைந்தேனே…

என்னைத் தந்து, உன்னைக் கொள்ள, 

அணுஅணுவாகத் துடித்தேனே!;
முன்னம் பதித்த முத்தத் தடங்கள்,

தடவிப் பார்த்து மகிழ்ந்தேனே;

இன்னம், இன்னம் கிடைத்திட நானும்−

ஏங்கி, ஏங்கியே,  இளைத்தேனே!
நாளும் பொழுதும், உந்தன் நினைவில், 

நானும் நீயாகிப் போனேனே;

கோளும், கிழமையும் துணை வாராத போதும்,

கோவிந்தன் காதலி ஆனேனே!
கனியும் இந்த காதலென்று,

காதல் பட்சியும் சொல்லிடுதே;

இனியும் வருத்தம் இல்லையென்று,

என் காதில், காற்றும் சொல்லிடுதே!
தனிமைத் துயரின் தணலின் வீச்சு−

தணியுமென்ற சேதியினை,

கனிந்த உந்த காதல் பார்வை,

கருத்தில் நின்றே சொல்லிடுதே!
அருகில் வந்து நீ அணைப்பாயென,

ஆருடச் சேதி,  சொல்லிடுதே;

பருவம் வேண்டும் தேவை யாவும்,

பரமன் தீர்ப்பான் என்றிடுதே!
கன்னியின் தலைவன் கண்ணன் என சொல்லி, இடக்−

கண்ணின், இமைகளும் துடித்திடுதே;

கண்ணனின் காதலி,  கன்னி நானென,

கள்வனின், பார்வையே சொல்லிடுதே!
நிறமும், குணமும், நின்னை ஒக்க,

நெஞ்சம், எனையே நீங்கியதே;

நீலக்கண்ணன், நீயா, நானா, 

என்னும் ஐயம், என்னுள் ஓங்கியதே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s