​(54) நாச்சியார் மறுமொழி…

கண்ணன் எந்தன் அருகில் வந்து,

காதலைச் சொன்னானே;

காலமெல்லாம் காத்திருந்த அந்த சேதியைச் சொன்னானே;
என்னைக் கணமும் பிரியேன் என்றும், காதில் சொன்னானே;

எந்தன் வாழ்வில், இனி் எல்லாம்  நீயே என்றும் சொன்னானே!
ஏக்கத்தினாலே, தூக்கம் தொலைந்த நாட்களைச் சொன்னானே;

எண்ணி, எண்ணியே, அவன் விரகத்திலே, எரிந்ததை சொன்னானே;
நீக்கமின்றி அவன் நெஞ்சினிலே, 

நான் நின்றேன் என்றானே;

நீங்காதிருப்பாய் அன்பே, நான் உன் அடிமை என்றானே!
காதல் நோய்க்கு மருந்து உந்தன்

காலடி மண்ணே என்றானே;

கனிந்தே, அதனை, என் சிரத்தில் இடுவாய்,

பிழைப்பேன் என்றானே;
வேதனைத்தீயை அணைத்து

எனக்கு, 

விடுதலை தருவாய் என்றானே; என்−

வாலிபம் விளங்க, வரமாய் நீயே வருவாய் என்றானே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s