​(57)  நாச்சியார் மறுமொழி…

உன் விழியின் மணியாக, நான் ஆக வேண்டும்;

உன் மொழியில் பொருளாக, நான் வாழ வேண்டும்;
என் உலகில் எல்லாமே, நீயாக வேண்டும்;

என் உயிரும் என்றுமே, உனக்காக வேண்டும்!
அழகான உன் மார்பில், தலை சாய வேண்டும்;

அதற்கான தனி உரிமை, நீ தரவும் வேண்டும்;
பழம் போன்ற கன்னத்தில், நீ பசியாறவேண்டும்;

பாவை என் தேவைக்கு, நீ பதில் சொல்ல வேண்டும்!
சொல்லாத எண்ணங்கள், நீ உணர வேண்டும்;

சொந்தமாய், என்னை நீ கையாள வேண்டும்;
பொல்லாத தனிமையை, நீ விரட்ட வேண்டும்;

பொத்தி நான் வைத்திட, நீ உன்னைத் தர வேண்டும்!
தடையேதும் வாராத, தனிமையும் வேண்டும்;

தமிழாய் நம் வாழ்வு, இனித்திடவே வேண்டும்;
இடைவெளிகள் இல்லாத ஓர் உறவு வேண்டும்;

என்றும் உனை என்னவனாய், ஊர் அறிய வேண்டும்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s