​(58) நாச்சியார் மறுமொழி..

விழி வழியும் என் கண்ணீர்−உன்னை

பழி சொல்லுதே;

மொழி முத்தால், நீ மனம் திறக்க−ஒரு

வழியும் தோன்றுமே!
காதலதன் சோகமெல்லாம்−இங்கு

கசிந்தோடுதே;

கன்னி என் நிலையை, அது−

காட்டிக் கொடுக்குதே!
ஆதரவாய், உன் கரங்கள்−எனை

ஆரத் தழுவுமா?

ஆதரம் பெருக−அதரம் 

அன்பை எழுதுமா?
நாள், நொடியாய், நான் அடைந்த−

நலிவைச் சொல்லவா?

தோள் சாய்ந்து, அந்த துயரை−

தீர்த்துக் கொள்ளவா?
பார்வை இழந்த பாவையாக−

பரிதவித்தது தெரியுமா?

மார்வம் சேர்ந்து, மனத்துன்பம்

மங்கை, போக்கிக் கொள்ளவா?
காயம் கொண்ட இதயத்தையே−உன்

காதல் கொண்டு மீட்கவா?

ஆயன் செய்த பாவத்தையே−என்

அன்பைத் தந்து, மறக்கவா?
ஒற்றைச் சொல் நீ சொன்னால், என்

உள்ளம், மகிழ்ந்து ஏற்குமே;

மற்றைய, உன் தவறெல்லாம்−இங்கு

மறு நொடியில், மாளுமே!
போனதெல்லாம் போகட்டுமே;

புனிதனாக நீ வந்திடடா;

ஆனதெல்லாம் ஆகட்டுமே−புது

அத்யாயம்  ஒன்று தொடங்கிடடா!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s