​(59) நாச்சியார் மறுமொழி…

கண்ணன் கனவை கண்களில் ஏந்தி−

காதல் வீதீயில் திரியவா?

எண்ணம் முழுதும், அவனை நிறைத்து−

என்னை, அவனுள் ஒளிக்கவா? (கண்ணன்)
யமுனைக் கரையில், யாதவன் அருகில்,

என்னை மறந்து இருக்கவா?

இரவின் மடியில், அவனின் இசையில்,

இரவின் மடியில், அவனின் இசையில்,

என்னை நானும் இழக்கவா?

என்னை நானும் இழக்கவா?  (கண்ணன்)
கார்குழல் சரியும் அவனின் வதனம்−

மார்பினில் ஏந்திக் கொள்வாயா?

பார்வைச் சிறையில் அவனை அடைத்து−

பார்வைச் சிறையில் அவனை அடைத்து−

போர்வையாய் நானும் படரவா?−

போர்வையாய் நானும் படரவா? (கண்ணன்)
பிரிய விடாமல், அவனை எந்தன்−

சேலை நுனியில் முடியவா?

எரித்திடும் இந்த விரகத் தீயை−

எரித்திடும் இந்த விரகத் தீயை−

யாதவன் தழுவலால் அணைக்கவா?−

யாதவன் தழுவலால் அழிக்கவா?  (கண்ணன்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s