​(பாணியாலெடுத்து, பரிந்தேற்பாயோ?..)

அன்றளந்தடைத்து, கடந்திடந்த காலை,

அடியேன் காணப் பற்றில்லை;

பின்னும், மச்ச கூர்மமாய், 

அச்சமிலா வராகமாய்,

மண்ணளந்த வாமனனுமாய், நீ−

இங்கேகின காலை, 

ஏழை எனக்கொரு பாக்கியமில்லை;
அரிவுருக்கொண்டு 

அரியை அழித்த போதும்,

அரசர் குலமுணர பாடம் புகட்டிய போதும், 

அபலை உனை காண வாய்க்கவில்லை;
அண்ணல் வனமேகிய போது, 

அடி தொடர்ந்தொரு சேவை 

செய்யுமொரு பேறும், 

பெற்றிலேனில்லை;
ஆயனுக்கு முன் தோன்றலும், நாயேன் கண்டிலேனில்லை;

மண்ணும் வெண்ணையுமுண்டு, 

மதங்கொண்ட அசுரரை நீ மாய்த்த போதும், 

மாயன் உனை, இனங்காணவுமில்லை;
நூலும், நாலும் அறிந்தேனில்லை;

மாலோன் உனை மனத்திருத்தியதில்லை;

காளிய நெஞ்சம் கொண்டதனாலே, 

தாளிணை பணிய அறியவுமில்லை;
காலன் கயிற்றுக்கு வீழும் முன்னே, 

கரியவா, என் மேல் கனிந்திடுவாயோ?

கலியினை தீர்க்கும் கழலிணை பதித்து,

கடையேன் எனது ஊன் உடலொழித்து, 

பாலினில் திரளும் வெண்ணையாமென் ஆன்மா, 

பாணியாலெடுத்து, பரிந்தேற்பாயோ?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s