​(60) நாச்சியார் மறுமொழி..

நேற்று வரை, உனை நினைத்தே

இளைத்தேனே;

இன்று முதல், உன் கரத்தில் இணைந்தேனே;
காணும் வரை, ஏக்கங்களே, என் மனதில்;

கண்ட பின்பு, தூக்கம் இல்லை, என் விழியில்!

(நேற்று)
என்னை நீ, கை கொள்ளும் போது,

என் நெஞ்சு, நெகிழ்வதும் ஏனோ?

உன்னை நான் உணரும் போது−

என் உளம், சிலிர்ப்பதும் ஏனோ?
ஈதென்ன காதல், கண்ணா!

இன்பமெலாம், எனக்கு தானோ?

பேதை என், ஸ்பரிஸத்தினாலே,

பரவசம், உனக்கும் உண்டோ?   (நேற்று)
துவங்கிய காதல் எல்லாம்,

தொடர்ந்த பின், முடியும் தானே?

இணங்கிய நமது காதல்−

இயற்கைக்கும், விலக்கு தானே!
உன்னிலே கலந்திருக்கும்−

என்னுயிர், உனது தானே?

என்னிலே கரைந்திருக்கும்,

உனக்கும் அது தெரியும் தானே!   (நேற்று)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s