​(திவத்தே எம்மை பொருத்துவையோ?…..)

ஆலிலைத் துயின்ற அழகனுமோ?

காலினில் விலங்கையே அறுத்தவனோ?

சூலினில் சுமந்தவள்

துயர் துடைக்க, ஒரு−

நாளினில் கஞ்சனை முடித்தவனோ?
பாலினில், எண்ணமே கொண்டவனோ?

பால், தயிர், வெண்ணையும்

உண்டவனோ?

நூலிடை மாதரின் நெஞ்சுருக்கி, தன்

பால், அவரையே கவர்ந்தவனோ?
கேலிக்கு தன்னை ஆட்படுத்தி, அந்த−

வேல்விழியர் முன்

நின்றவனோ?

பாலிக்கும் எண்ணமே பெருகி வர, அன்று,

காளிங்க நர்த்தனம் செய்தவனோ?
பொல்லாத மழையும் பெருகி வர, பேர்−

சொல்லாத

கருணையால் காத்தவனோ?

இல்லாத குணங்களை எம்மிடம் இருத்தி−யாம்

வெல்லாத திவத்து, இவன்− பொருத்துவனோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s