​(பரந்தாமா, சரிதானா?…)

கண்ணன் எந்தன் அருகிருக்க, 

கண்ட சுகம் நெஞ்சிருக்க,

கண்கள் இரண்டும் திறக்கணுமோ? கை−

கொண்டதும், நானிழக்கணுமோ?
மன்னவன் போல செய்த லீலை−

மனதினிலே பொத்தி வைப்பேன்;

மறந்து விழி திறந்து விட்டால்−

மற்றவர், இனம் கண்டு கொள்வார்!
கண்ணன் தந்த கிறக்கமெல்லாம்,

கண் வழியே வழிந்திடுமே;

கன்னி பெற்ற பேறறிந்தால், 

காண்பவர் தம் கண்படுமே!
விழிகள் திறக்க, காட்டிக் கொடுக்கும்;

வாழ்ந்த நிலையை, கூட்டிக் கொடுக்கும்;

வட்டமிடும் வஞ்சி கூட்டம்,

வரதனையே, ஆட்டி வைக்கும்!
பரமனுக்கு சங்கடமும்−

பாவம், என்னால் வரலாமா?

பாவை விழி மூடியிருப்பேன்;

பரந்தாமா, சரிதானா?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s