​(62) நாச்சியார் மறுமொழி…

மாயன் செய்த மாயமோ?

மனமும் கொள்ளை போனதே!

ஆயன் செய்த அதிசயமோ?

அகமும் அடிமையானதே!
நேயன் செய்த ஜாலமோ?

நெஞ்சம் நெகிழ்ந்து உருகுதே;

காயம் மெல்ல கரைகிறதே, இது

கண்ணன் லீலை ஆனதே!
நிலவும் என்னை எரிக்கிறதே!

நங்கை என்ன செய்வனோ?

உலவும் தென்றல் காற்றுமே, எனை

உருக்குலைய செய்யுமோ?
மலர்கள் கொண்ட நாற்றமும்,

மங்கை என்னை வாட்டுதே;

உலர்ந்த எந்தன் மேனியும்,

உள்ள இருப்பைக் காட்டுதே!
கருமை நிறம், கண்டாலே,

கண்கள் அவனைத் தேடுதே!

இருப்பும் கொள்ளவில்லையே;

இதயம் அவனை நாடுதே!
பெண்ணின் வருத்தம் புரியாமல்,

என்னை அவன் கொல்வதென்?

எந்தன் நிலையை அவன் உணர,

நான் சொல்லும் வார்த்தை, இனியுமென்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s