​(63)  நாச்சியார் மறுமொழி…

கண்ணன் மேல் கொண்ட காதலே,

கன்னி நான் சொல்லக் கூடுமோ?

பெண்ணையும் ஆண்டாயே; பேதை ஆனேனே;

பேசவும் வார்த்தைகள், வாராததேன்?
சந்தனம், வெந்தணலாய் மாறிப் போகுமே−

என் தனம், நீயும் இங்கு, என்னை நீங்கினால்!

சந்திரன் சுட்டு,  மேனி எரிப்பதுமேன்?

மந்திரம் செய்தாயோ, மாதவா, சொல்!
காமனின் கணையும், என்னைத் தின்னுகின்றதே;

கண்ணா, உனக்கு அது தெரியாதோடா?

வாமனா, வைகுந்தா, வந்திடுவாயா?

வஞ்சியின், விரகத் தீயும் அணைத்திடுவாயா?
உலர்ந்ததே உதடுகள், உனக்காகவே;

உத்தமா, நீயும் அதை உணரலாகுமே;

மலர்களில், தேனை வண்டு பருகுகின்றதே;

மாயவா, நானும் உந்தன் உடைமையாகுமே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s