​(நீயே நானாய், நானே நீயாய்….)

உன் நினைவாலே, நானும், நீயாகிப் போனேன்;

உன்னை மடிப்பிச்சைக் கேட்டு, ஒரு பாதி ஆனேன்!
என் சுயம் தொலைந்து, உன்னில் கலந்து நான் போனேன்;

உன் முகவரியால், என் விலாசம் எழுதிக் கொண்டேன்!
உன் விழிச் சூரியனால், அகிலம் நான் அளந்தேன்;

என் விழிச் சந்திரனால், அனைத்தையும் நான் அணைத்தேன்!
உன் திருக்கரம் கொண்டு, வேங்குழலும் இசைத்தேன்;

என் தளிர்கரத் தீண்டலிலே, உனையே நான் அசைத்தேன்!
உன் இசை கேட்டு நான், ஆடவும் செய்தேன்;

என் ஆடலில், உன்னைக் கட்டவும் நான் அறிந்தேன்!
உன் வனமாலையை நான் எனதாக்கிக் கொண்டேன்;

என் கரமாலையை நான் உனதாக்கிக் களித்தேன்!
உன் துகிலை நானுடுத்தி, உன் வாசம் உணர்ந்தேன்!

என்னேயே உன் துகிலாக்கி, உன் உடல் மூடி நின்றேன்!
உன் வடிவில் நான் கலந்து, உருமாறி நின்றேன்;

என் வடிவம் தொலைத்ததிலே, அகம், மகிழ்ந்திருந்தேன்!
ஈருடல் என்பதெல்லாம், இனி இல்லை என்றேன்;

ஓருருவம் நமதென்று,உலகெல்லாம்,சொன்னேன்!
ஆருயிர், உன்னிலே, கரைந்ததைக் கூறி,

காருண்யம் கண்ணனது என்றே அறிவித்தேன்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s