​(பாலிப்பாயா, பரந்தாமா?….)

மனதை ஒரு மலராக்க 

மறந்தேனே நான்;

எனதெல்லாம் துறந்திடவும், 

மறுத்தேனே நான்!
உனதான ஆன்மம் இதை, 

எனதென்றேனே;

எனதென்று எண்ணியதே, 

சரியென்றேனே!
எல்லாமும், என் வசமாய் 

நினைத்திருந்தேனே;

இல்லை என் நிகரென்று

இறுமாந்திருந்தேனே!
வாளாது, ஏன் நீயும்

பார்த்திருந்தாயோ?

தாளாத திமிருக்கும்−

தயை புரிந்தாயோ?
பிரிந்தோடி, உலகினிலே

நான் திரிந்தேனே; உனை

மறந்தோடி அலைந்தே,

நான் தனியானேனே;
விரைந்தோடி வந்தே, நீ−

எனை மீட்ப்பாயா? இங்கு

பறந்தோடி வந்தே நீ

பாலிப்பாயா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s