​(மனமே, அறிவாய்…)

ஆவெல்லாம், அடங்குது பார், 

ஆயன் கையிலே; மனமே−

நீயெல்லாம், நெருங்குவதும்,

உந்தன் இசைவிலே!
தனக்கென,  “ஆ” ஒன்றும் யாசிப்பதில்லை;

தாளிணையை, மலர் கொண்டு பூசிப்பதில்லை;

தாங்குவனோ தன்னை என்று யோசிப்பதில்லை;

துன்பம் வந்த நேரமெல்லாம், தூஷிப்பதில்லை!
ஐந்தறிவு என்று நீயும் கேலி செய்கிறாய்;

ஐயன், ஆலிங்கனம் அதனை செய்ய,

நீயும் பார்க்கிறாய்;

ஆரறிவு என்பதாலே, நீ ஆராய்கிறாய்;

அத்தனையும், விட்டொழித்தால், 

அவனை சேர்கிறாய்!
உன் பலம் என்று ஏதுமில்லை,

உணர்ந்திடுவாயே; நீ− 

ஒப்படைத்து பார்த்து விட்டால், 

உண்மை புரியுமே!

“உன்னதெல்லாம்” என்றவனின்

சரண் புகுந்தாலே,

ஓடி வந்து தந்திடுவான்,

என்றும் அபயமே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s