​( எனக்காக ஏற்பாயே…)

பவத்தின் மாந்தரை மனம் திருத்தி−

திவத்தே இருத்திட,  எனைச் சொன்னாய்;

உவந்தே அடியேன், இறங்கி வந்தேன்;

நயந்தே, காரியம் பல செய்தேன்!
நாரண நாமமே கரை சேர்க்கும், என

நானும் சொல்லியே, கூட்டி வந்தேன்;

காரணம் ஏனோ தெரியவில்லை− அவர்

கருத்தினில், அது போய் சேரவில்லை!
பாவம், இவரெல்லாம் வாடுகிறார்;

பந்த பாசத்தால், பிறவியே தேடுகிறார்;

பரந்தாமா, உனக்கது தெரியாதோ? நீ

பரிந்தால், இவர் ஆவி மீளாதோ?
இவரை, மனம் போல் ஆட்டி வைத்து−

இம்மைச் சுகத்தில் ஆழ்த்துகிறாய்;

துவரை மன்னனே, சரிதானா?

தூண்டிலை வீசுவதும் முறைதானா?
அடுத்தவர் எவர்க்கும், இவர் மீது−

தடுத்தாட் கொள்ளும் தயை உண்டோ?

அத்தன் நீயாகி போனதனால், உனை

அபயம் கேட்பதும் எம் உரிமை அன்றோ?
உன் அருளுக்கு, அடியேனே பாத்திரமோ?

உயிர்கள் பிறவெல்லாம், ஒரு விலக்கோ?

உதவிடு, எனக்காய் இவர்க்கென்று−

உரிமையில், உன்னை கேட்கின்றேன்!
உன்னை சதமென நான் அணைக்க, 

என்னை இதமென இவர் நினைக்க,

கன்றின் வழுவுகள் பாராது, இவரை−

கண்ணா,  எனக்காய், நீ ஏற்பாயே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s