(இதை மருதமலை மாமணியே மெட்டில் பாடிப் பார்க்கவும்..)

வாடும் மாந்தர் குலம்,

வாழ்விக்கும் பதி எதுவோ?

வளமெல்லாம் சேர்த்து நமை,

உயர்த்திடும் ஓர் பதி எதுவோ?

நாடும் நல்அடியார்க்கு

நலம் கூட்டும் பதி எதுவோ?

நாரணன் நயந்தருளும் கச்சியம்பதி அதுவே!
திருக்கச்சியிலே மேவும் என் திருமாலே!

தஞ்சமென உனை அடைந்தேன், அருள்  நீயே!

தாரக மந்திரம், நாரண நாமமே;

தேவா, நின் தாளிணை, என் கதியே!

(திருக்கச்சி)
வைகாசி திருநாளில்,

கருட வாகனத்தில்,

காட்சியே தந்திடும் என் வரதய்யா!  (திருக்கச்சி)
எத்தனை இடர் வரினும்,

அத்தன் உனை மறவேன்;

பித்தனாய் நின் பதங்கள்−

பற்றியே கிடந்திடுவேன்!

அஞ்சேல் எனும் உன் சொல், 

ஆறுதல் அளித்திடுமே;

ஏழேழு பிறவிக்கும்,

எட்டெழுத்து, அருமருந்தே!

(திருக்கச்சி)
சந்திர சோதரி மனம் உறைபவனை தொழுவேன்;

நான் தொழுவேன்!

இந்த்ரிய எதிரியை  இல்லையென்றாக்கி

எழுவேன், நான் எழுவேன்!
பாற்கடல் துயில்பவனே!

பக்தரைக் காப்பவனே!

பார்ப்பதெல்லாம் உனது

உரு, அந்த திருவுருவே!

தீர்ப்பதெல்லாம் நீ எனது வினை, தீமையும் அழிந்திட!
அச்சுதனே! அருட்கடலே!

ஆளவந்த அரவிந்தனே!

அச்சுதனே! அருட்கடலே!

ஆளவந்த அரவிந்தனே!
உடலது, உயிரது, உயிர் உறை பொருள் அது;

உணர்விலும் எனை வந்து

அணைக்கின்ற கரு அது!

அருள்வாய், அழகா, வரதய்யா….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s