(உன்னைச் சரணடைந்தேன்….)

மதியும் மயங்கிடுதே, 

மதிவதனம், நோக்கையிலே!

மதியே, என் ரதியே, இவன்

மனநிலையும், நீ அறிவாயோ?
எதிலுமுன் எழில் வதனம்,

ஏழை இவன் காண்பதேனோ?

என்னையே நான் மறந்து, 

உன் நினைவில் அமிழ்வதேனோ?
கள்ளும் வடியுதடி,

கன்னி உந்தன் கண்ணினையில்;

சொல்லிட வார்த்தையில்லை,

சொக்கியே நான் போனேனே!
அதரம் அழைக்குதடி,

அதி ரசமாய் இழுக்குதடி;

மதுவோ, அது எதுவோ,

மாற்றம் உன்னால் நடக்குதடி!
அப்படிப் பார்க்காதே,

ஆயன் அதில் கரைவேனே;

எப்படி இதை ஏற்பேன்?

எனக்கேது ஒரு வலிமை?
தாயே, தயை புரிவாய்,

தமியேன் மேல் இரங்கிடுவாய்;

நீயே நிலை அறிந்து,

நான் மீள வழி சொல்வாய!
இவனைக் காத்திடவே,

இனி யாரால் ஆகுமடி?

இதமே அறிந்தவளே, உன்

இணையடி நான் தஞ்சமடி!
என்னை மீட்டெடுத்து,

எனக்கொரு வாழ்வீந்திடடி;

உன்னைச் சரணடைந்தேன்,

உதவிட நீ வந்திடடி!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s