(எமக்கே, அருள்வாயா?….)

பட்ட மரம் துளிர்த்திடவே, உன்−

பிஞ்சு விரலால் தடவிக் கொடு;

பார்வை என்னும் சொடுக்குப் போட்டு,

பார்ப்பதெல்லாம், மடக்கி விடு!
குட்டிக் காலால் நடந்து வந்து, மனம்−

கொள்ளை அடித்து, சென்று  விடு;

குமிழ் சிரிப்பை, தூண்டில் வீசி,

கோடி இன்பம் சேர்த்து விடு!
இடையில் இருக்கும் குழலெடுத்து, எமை,

இசை வெள்ளம் நீந்த விடு;

அடங்கி நிற்கும் அழகு மயில்−தனை

மறந்து ஆட விடு;
முத்தாக வார்த்தை பேசி, எம்−

மோகமெல்லாம் தீர்த்து விடு;

தித்திக்கும் கன்னம் தந்து,

தாபமெல்லாம் போக்கி விடு!
ஒரு முறையே, உன்னை ஏந்த−

எமக்கு நீயும் வாய்ப்பு கொடு; அந்த−

ஒரு முறையின் இன்பம் எம்மில்−

நிலைத்து நிற்க அருளி விடு!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s