​(இசை விடு தூது…)

இன்னும் யாரை அழைக்க நீயும், 

இசையை, தூது அனுப்புகிறாய்?

இதயம் மேவும் நினைவு தன்னை,

இரகசியமாய் கூறுகிறாய்?
இசையில் நனைந்த தேனு ஒன்று−

தனை மறந்திங்கு நிற்குது;

இசையில் இழந்த பேதை ஒன்றோ−

தனை மறைத்திங்கு வருகுது!
வருபவர்க்காய், விழியை வைத்து,

வழியை நீயும் நோக்குகிறாய்;

வந்த பின்னே தருவதற்கா,

அதர வசந்தம் தேக்குகிறாய்?
வேங்குழலிடம் சினமும் கொண்டு,

வஞ்சி உள்ளம் பொருமுது;

ஏங்கிடும் அவள் இதயமுமே,

இது தவறென புலம்புது!
நடக்கின்ற நாடகமெலாம்,

நந்தன் மகவு பார்க்குது!

“நான் ஏதும் அறியேன்” என

நமட்டுச் சிரிப்பு சிரிக்குது!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s