​(இன்று ராதாஷ்டமிக்காக, கண்ணன், ராதை ஸம்வாதம்… கண்ணன், ராதையை தஞ்சம் அடைகிறான்..)

கண்ணன்:−
அணுவிலும் உனக்குருகும்,

எனை−

அன்பால் நீ அணைப்பாயே!

கனவிலும் காதல் செய்யும்,

கண்ணனை நீ ஏற்பாயே!
ராதை:−
வேண்டும் எனத் தோன்றும்,

நேரமே− நீ வருவாயே;

வந்த பின், சுகமடைந்து,

வந்த வழி செல்வாயே!
பேதை என அறிந்தே, 

பேதமையே, செய்வாயோ?

வாதையில் வஞ்சியுமே,

வருந்துவதை அறிந்தாயோ?
போதும், போதுமடா, 

பரந்தாமா, விளையாட்டு;

பாவையும் படும் துயரம்−

பிளந்து நெஞ்சம் காட்டிடவோ?
ஏனோ, அலைக்கழித்து, 

அதில் சுகமே காணுகிறாய்;

வீணே பேசுவதால்,

விளைவதுமென், சொல்வாயே!
எதிரே வருவதுவும், பின்

விலகியுமே செல்வதுவும்,

புதிதே உனக்கன்று;

புரிந்தவர் யார் உன்னை என்றும்?
எனையே தீண்டாதே;

என் உயிரை உறுத்தாதே;

தனையே தர விழைந்த−

தவறெனதே; நெருங்காதே!
கண்ணன்:−

சினமே விட்டொழிப்பாய்;

சீற்றமதும் விலக்கி வைப்பாய்;

கணமும் உனைப் பிரிந்து,

காதலியே, உயிர் தரியேன்;
வா, வா, வந்து விடு;

வைகுந்தனை சேர்ந்து விடு;

தா, தா, தந்து விடு;

தமியனுக்கருள் தந்து விடு!
முதலும் கடைசியுமாய், 

முகுந்தனையே மன்னிப்பாய்;

இதமென உனை அடைந்தேன்;

இவன் வழக்கை நீ தீர்ப்பாய்!
சத்தியம் செய்திடுவேன்;

சிறு நொடியும், இனி அகலேன்;

சகலமும் உனக்காக்கி, என்

சிந்தையிலும், உனை விலகேன்!
ராதே, மனம் கனிந்து, உன்−

ரங்கனையே ஏற்றிடுவாய்;

கோதே, உளம் உவந்து, 

உன்−

கோவிந்தனையும் காத்திடுவாய்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s